ஜமா அத்தே இஸ்லாமிக் ஹிந்த் மகளிர் அணியின் சார்பில் மது போதை, ஆபாசம், தவறான உறவுகள் என பெருகும் இளைஞர்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை ஒழுக்கமே சுதந்திரம் என்னும் மையக்கருத்தில் பரப்புரை நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கூறுகையில்,…
மதுபோதை, ஆபாசம், தவறான உறவுகள் எனப் பெருகும் தீமைகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 முதல் 30 வரை ஒழுக்கமே சுதந்திரம் எனும் மையக்கருத்தில் பரப்புரையை முன்னெடுத்துள்ளது.
மது, போதை இன்று பெருகிக் கொண்டிருக்கிறது. குடி நோயாளிகளின் நாடாக இந்தியா மாறி வருகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆண், பெண் வேறுபாடின்றி மது அருந்துகின்றனர். இதனால் தீமைகன் பெருகிவிட்டன. நோய்கள் அதிகரித்துவிட்டன. விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வண்புணர்வு என அனைத்துத் தீமைகளுக்கும் தாயாக மது இருக்கிறது.
மதுவை ஒழிக்க வேண்டிய அரசாங்கமே டாஸ்மாக் கடைகளை நடத்துவது வேதனையளிக்கிறது. போதை நாட்டையே நாசப்படுத்திவிடும் என்பதால் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னெடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆகஸ்ட் 11 ஆம் நாள் போதைக்கு எதிரான நாளாக அறிவித்து மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணாவை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரிய முயற்சி, அதே வேளையில் மதுவை தடை செய்யாமல் போதை இல்லா பாதை சாத்தியம் இல்லை என்பதை உளார்ந்து தமிழ்நாடு அரசு பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும்.
இன்று பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா மாறி வருகிறது. இந்தியாவின் மகள்கள் தொடர்ந்து சீரழிக்கப்படுகிறார்கள். டெல்லியில் 2012 ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில் 22 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதையடுத்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்கப்பட்டன.
ஆனாலும் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதாகவும், ஆண்டுதோறும் 32,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாவதாக ஒன்றிய அரசின் NCRB தெரிவிக்கிறது. ஹத்ராஸ் பட்டியலினப்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் கொலை, உன்னாவில் சிறுமி பாலியல் வன்கொடுமைக் கொலை, கதுவாவில் 8 வயது ஆசிபா கூட்டுப்பாலியல் வன்கொடுமைக் கொலை, இப்போது கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புணர்வுப் படுகொலை என இக்கொடூரங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருகின்றன. அதேநேரத்தில் குற்றவாளிகள் தப்பிவிடுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி காணல் நீராகவே இருக்கிறது.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், சிந்தனை மாற்றமும், இறையச்சமுமே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். ஒருபால் உறவு, கள்ள உறவுகள், திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்தல் போன்ற இழி செயல்கள் இன்று பெருகி வருகின்றன. இது வருங்காலத் தலைமுறையயே நாசப்படுத்திவிடும். இந்தக் கேடுகெட்ட செயல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும். மது, போதை, ஆபாசம், ஒழுக்கக் கேடுகளுக்கு எதிராக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி முன்னெடுத்திருக்கும் இந்தப் பரப்புரையை முன்னிட்டு அரங்குக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி முனைக் கூட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் நிகழ்வுகள், சமூக வலைதள விழிப்புணர்வு என செப்டம்பர் மாதம் முழுவதும் பல விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உள்ளோம்.
இது முஸ்லிம் பெண்கள் முன்னெடுக்கும் பரப்புரைதானே தவிர இது முஸ்லிம்களுக்கான, பெண்களுக்கான பரப்புரை அல்ல. ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் இந்த நல்ல நோக்கத்திற்காக ஒன்றிணைவோம். ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம் என தெரிவித்தார்.
Comments are closed.