திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் – செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும் – செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்ரமணியன் பேட்டி

 

திருச்சியில் 78வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆன்ரோடு ஸ்கேட்டிங் ராலி தேசிய ஒற்றுமை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 50க்கும் அதிகமான வீரர்கள், வீராங்கனைகள் பங்கு பெற்றனர், இந்நிகழ்ச்சியினை திருச்சி திருவரம்பூர் டிஎஸ்பி அறிவழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார், திருச்சி மாவட்ட காவல்துறையினரிடம் முறையே அனுமதி பெற்று மிகுந்த பாதுகாப்புடன் திருவெறும்பூர் சரக காவல் துறையினர் ஒத்துழைப்புடன் ஸ்கேட்டிங் அணிந்து கொண்டு வீரர்கள், வீராங்கனைகள் சாலையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜெய் ஹிந்த் என்ற முழக்கத்துடன் ஆன் ரோடு ஸ்கேட்டிங் ராலி நடைபெற்றது,

- Advertisement -

இந்நிகழ்ச்சியினை செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ராகேஷ் சுப்பிரமணியன் தலைமையில், செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் பொதுச்செயலாளர் பிரவீன் ஜான்சன் மற்றும் தமிழ்நாடு பயிற்சியாளர் அமல் ஜோயல் ஒருங்கிணைந்து மிகச் சிறப்பாக நல்ல முறையில், பாதுகாப்புடன் மிகுந்த விவேகத்துடனும் மாணவ மாணவிகளிடம் எழுச்சியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி நடைபெற்றது, நிகழ்ச்சியின் முடிவில் TRUWDES ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்குள்ள முதியோர்களுக்கு இரவு உணவு வழங்கி மகிழ்ந்தனர், நிகழ்ச்சியில் மாணவர்கள் மாணவிகள் செவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அகாடமி இன் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,

மேலும் நிகழ்ச்சியில் போது செவன் ஸ்டார் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் தமிழக அரசிற்கு முக்கிய கோரிக்கை ஒன்றினை முன் வைத்துள்ளார், திருச்சி மாவட்டத்தில் ஸ்கேட்டிங் மாணவ மாணவிகளுக்கு நல்லதொரு ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கம் அரசு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், அதில் முறையே பயிற்சி பெற்ற மாணவர்கள் இன்னும் பல சாதனைகள் படைத்து, வெற்றிகள் பெற்று பல உயரங்கள் தொட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்