தமிழக முன்னாள் முதலமைச்சர், முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, திமுக முதன்மை செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் அறிவுறுத்தலின் படி, திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாநகர செயலாளர் மேயர் அன்பழகன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மண்டல தலைவர்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.