திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட காட்டூர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பங்கேற்று 10 அடி உயரமுள்ள பீடத்தில் 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் சிலையை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அப்துல் சமது, மாநகர செயலாளர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.