வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் 1 கோடி நிதியுதவியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.


இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கடும் மழைப் பொழிவு மற்றும் நிலச் சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி அறிவித்ததற்கிணங்க, இன்று (6.8.2024 செவ்வாய் கிழமை), கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கேரள மாநில மின்துறை அமைச்சர் மாண்புமிகு K. கிருஷ்ணன்குட்டி ஆகியோரை, அதிமுக தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான S.P. வேலுமணி எம்.எல்.ஏ, கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முனைவர் பொள்ளாச்சி V. ஜெயராமன், M.L.A., கூடலூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன், கேரள மாநிலக் கழகச் செயலாளர் G. சோபகுமார், கோவை புறநகர் வடக்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் A. நாசர் ஆகியோர் நேரில் சந்தித்து, கழகத்தின் சார்பில் நிவாரண நிதியாக 1 கோடி ரூபாய்க்கான வரைவோலையை வழங்கினார்கள். அதற்கு, கேரள மாநில முதலமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் தமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.





**prostafense**
ProstAfense is a premium, doctor-crafted supplement formulated to maintain optimal prostate function, enhance urinary performance, and support overall male wellness.
**mitolyn**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.