இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடுகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் ஆய்வு !!
இலங்கைத் தமிழர் முகாமில் கட்டபட்டு வரும் வீடுகளை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் ஆய்வு !!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த
மூன்றம்பட்டி ஊராட்சி உட்பட்ட கேத்துநாயக்கன்பட்டி கிராமத்தில் பாம்பாறு அணை இலங்கைத் தமிழர் மக்களுக்காக
4 வீடுகள் கொண்ட
ஒரு தொகுப்பு வீட்டின் மதிப்பீடு 23 இலட்சம் மதிப்பீட்டில் 52 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன,
மொத்த மதிப்பு 2,96 கோடி ஆகும்,
இதனை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள், மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு, முன்னிலையில் ஆய்வு செய்தார்,
இந்த ஆய்வின் போது அமைச்சர்
செய்தியாளர்களை சந்தித்தார் :
அப்பொழுது தொடர்ந்து முத்தமிழர் கலைஞர் முதல் கொண்டு இன்றைய மாண்புமிகு முதல்வர் தமிழக மு க ஸ்டாலின் அவர்கள் பெரு முயற்ச்சியால் இலங்கை தமிழர் மக்களுக்கு சிறப்பான முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதை ஆய்வு செய்யவும், இன்னும் ஒரு சில மாதங்கள் பணிகள் நிறைவேற்று பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்கப்படும் ,
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் இலங்கை தமிழர் மக்களுக்கு கல்வி அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளது, மேலும் இந்த மக்களுக்கு அனைத்து வசதிகளையும் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின்
பொற்காலாட்சியில் ஏற்படுத்தி தரப்படும் என்று கூறினார்,இதில்
ஒன்றிய குழு தலைவர் திருமதி உஷாராணி குமரேசன் ,திமுக ஒன்றிய கழக செயலாளர் மூன்றாம் பட்டி குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர் மாலதி நாராயணசாமி ,
ஊரக வளர்ச்சி மற்றும் முகமையின் செயற் பொறியாளர் திருமதி மலர்விழி,உதவி செயற்பொறியாளர் துரைசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, பாலாஜி, உதவி பொறியாளர் மாதையன், ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன்,
மற்றும் பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்,