திருச்சியில் ஶ்ரீ அமுராதி சிட்ஸ் (பி) லிமிடெட் திறப்பு விழா நடைபெற்றது!

0

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ஶ்ரீ அமுராதி சிட்ஸ் (பி) லிமிடெட் நிறுவனம் புத்தானத்தம், ஆலம்பட்டி புதூர் ஆகிய பகுதிகளை தொடர்ந்து திருச்சி மாநகரில் தனது கிளையை தொடங்கியுள்ளது. புதிய கிளையின் திறப்பு விழா திருச்சி கண்டோன்மெண்ட் ஒத்தக்கடை பகுதியில் உள்ள TABS வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது.

- Advertisement -

இதில் தலைமை விருந்தினர்களாக பெல்மான்ட் டைலர்ஸ் நிர்வாக இயக்குநர் அப்துல் கரீம் ஷக்லா, கட்டாமாரன் இன்வெஸ்ட்மென்ட் சர்வீஸ் நிறுவனர் பெரியார் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி புதிய கிளையை திறந்து வைத்தனர். முன்னதாக ஶ்ரீ அமுராதி சிட்ஸ் நிறுவனர்கள் பாலசுப்பிரமணியன், லக்ஷ்மணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மேலும் இந்நிகழ்வில் ஜே.சி.ஐ மற்றும் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்