மத்திய நிதியமைச்சகம்
ஜி.எஸ்.டி. வரி வசூல் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஜி.எஸ்.டி வரி வசூல் ஏபரல் மாதத்தில்
ரூ.1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி ஆகும். இதில், சி.ஜி.எஸ்.டி ரூ. 33,159 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி ரூ. 41,793 கோடி ஆகும். பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.36,705 கோடி உள்பட ஐ.ஜி.எஸ்.டி. வசூல் ரூ.81,939 கோடி ஆகும்.
பொருட்கள் இறக்குமதி மூலம் வசூலான ரூ.857 கோடி உள்பட செஸ் வரி மூலம் ரூ.10,649 கோடி கிடைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட ஏப்ரல் மாதத்தில் 25,000 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது என மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.