ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரம்ஜான் குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், டாக்டர்கள் இன்ஜினியர்கள், தொழிலதிபர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல ஏக இறைவனை புகழ்ந்து இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய சுதந்திர வரலாற்றில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு, மக்களுக்கும் மிக முக்கியத்துவம் பங்கு உண்டு என்பதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். நமது இந்திய மண்ணில் அன்பும், சகிப்புத்தன்மையும், சகோதரத்துவமும் ஓங்க இந்த நாளில் நாம் உறுதி ஏற்போம்.
நம்முடைய பாரத நாடு வேற்றுமையில் ஒற்றுமை உள்ள நாடு. நாம் அனைவரும் இந்தியர்கள் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர் என்ற மதக்கோட்பாடுகள் இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாயினுடைய பிள்ளைகளாக நாம் இருக்கிறோம் என்பதை நினைவு கூறி, உங்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் ஈத் முபாரக் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.