எஸ்ஆர்எம் டிஆர்பி இன்ஜினியரிங் கல்லூரி, திருச்சியில் இயற்பியல் துறையில் இணைப் பேராசிரியராகப் பணிபுரியும் டாக்டர்.சக்திபாண்டி, நாக்பூர் பிரிவின் இந்தியன் சொசைட்டி ஆஃப் அனலிட்டிகல் சயின்ஸ் (ஐஎஸ்ஏஎஸ்) வழங்கும் இளம் விஞ்ஞானிக்கான விருதினைப் பெற்றுள்ளார். நாக்பூரில் உள்ள தாதா ராம்சந்த் பக்ரு சிந்து மகாவித்யாலயாவில் ISAS-இன் ஆண்டு நிர்வாகக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எஸ்ஆர்எம் டிஆர்பி இன்ஜினியரிங் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியர் டாக்டர் சக்திபாண்டிக்கு ஐஎஸ்ஏஎஸ் தலைவர் டாக்டர் பி.பி.சந்திரசூடன், துணைத் தலைவர் டாக்டர் ராகவ் சரண் ஆகியோர் இளம் விஞ்ஞானி விருதை வழங்கினர். ஐஎஸ்ஏஎஸ் நாக்பூர் பிரிவின் தலைவர் டாக்டர் அவினாஷ் வி பாரதி விருது மற்றும் டாக்டர் சக்திபாண்டி பற்றிய சான்றிதழை வழங்கினார்.
இளம் விஞ்ஞானிக்கான விருது மற்றும் ஆராய்ச்சியில் சாதனை படைத்த டாக்டர் சக்திபாண்டியை SRM குழும நிறுவனங்களின் தலைவர், துணை இயக்குநர், டீன் (ஆராய்ச்சி), மற்றும் முதல்வர் ஆகியோர் பாராட்டினர்.