- Advertisement -

திருச்சி அதிமுக வேட்பாளருக்கு ராட்சச மாலை அணிவித்து வரவேற்பு அளித்த திருச்சி மாணவரணி மாவட்ட செயலாளர் இப்ராம்ஷா!

1

- Advertisement -

திருச்சியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கு அதிமுக மாணவரணி சார்பில் பிரம்மாண்ட மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

 

Bismi

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது மேல சிந்தாமணி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவருக்கு, அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில், மேல சிந்தாமணி பகுதி பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

 

 

Vagai

முன்னதாக, கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, பொதுமக்கள் வெற்றி கோஷங்களை எழுப்பி, அதிமுக வெற்றி வேட்பாளருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திருச்சி மாவட்ட செயலாளர்கள் குமார், சீனிவாசன், அமைப்புச் செயலாளர்கள
ரத்தினவேல், வளர்மதி, மனோகரன், பகுதி கழக செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
1 Comment
  1. mitolyn says

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்