- Advertisement -

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாகமுகவர்கள், கிளைச் செயலாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும்- திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

0

- Advertisement -

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் தில்லைநகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என். நேரு வழிகாட்டுதலின்படி மத்திய மாவட்ட செயலாளர் தலைமையில் மாநகரச் செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் முன்னிலையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வருகிற மார்ச் 1-ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய, நகர, பேரூர் கழக பகுதிகளில் இரு வண்ண கொடியேற்றி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி ஆண்டு முழுவதும் சிறப்பாக பிறந்தநாளை கொண்டாட வேண்டும்.

Bismi

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாகமுகவர்கள், கிளைச் செயலாளர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும், அரசின் 3 ஆண்டு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி சிறப்பான வெற்றிக்கு பாடுபட வேண்டும்

Vagai

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், பாசிசம் மீளட்டும் ஜனநாயகம் வெல்லட்டும் என்ற தலைப்பில் தொகுதி வாரியாக பிரச்சாரக் கூட்டம் வருகிற 16, 17, 18 ஆகிய மூன்று தினங்களில் நடைபெற இருக்கிறது. இதில் திருச்சியில் வருகிற 17-ஆம் தேதி திமுக பொருளாளர் டி.ஆர் பாலு கலந்து கொண்டு பிரச்சார கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். இதேபோல் 18-ம் தேதி பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் பொன்முடி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
இதில் கழக தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்