- Advertisement -

திருச்சி கேர் கல்வி குழுமத்தின் 12 வது பட்டமளிப்பு விழா – 125 பேர் பட்டம் பெற்றனர்!

0

- Advertisement -

திருச்சி திண்டுக்கல் சாலை தாயனூர் பகுதியில் உள்ள கேர் கல்வி குழுமத்தின் 12 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் VDart குழுமத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான சித் அகமது சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு உறுதிமொழி மற்றும் பட்டதாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

Bismi

Vagai

இதில் MBA பிரிவில் 24, ME இன்ஜினியரிங் டிசைனில் 2, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 15, சிவில் இன்ஜினியரிங் 6, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 10, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் 16, கட்டிடக்கலை இளங்கலை 52 என மொத்தம் 125 பேர் பட்டம் பெற்றனர். மேலும் இவ்விழாவில் கேர் குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி பிரதிவ் சென்ட், கேர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தி, கேர் பொறியியல் கல்லூரி டீன் டாக்டர் பசும்பொன் பாண்டியன், கேர் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் துறை தலைவர் பெலிண்டா மற்றும் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்