- Advertisement -

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்களர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். திருச்சி மாவட்டத்தில் 22,91,890 வாக்களர்கள் உள்ளனர்!

0

- Advertisement -

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.01.2024 -ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2024 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 27.10.23 ஆம் ஆண்டு முதல் வாக்களர் சுருக்க முறை திருத்தம் மற்றும் தொடர் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அந்த திருத்தங்கள் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான அந்த இறுதி வாக்காளர் பட்டியலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகளில் முன்னிலையில் வெளியிட்டார்.

அதன்படி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 136691, பெண் வாக்காளர்கள் 141486, பிற வாக்காளர்கள் 13 என மொத்தம் 278190 வாக்காளர்கள் உள்ளனர்.

ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 147549, பெண் வாக்காளர்கள் 157312, பிற வாக்காளர்கள் 47 என மொத்தம் 304908 வாக்காளர்கள் உள்ளனர்.

Vagai

மேற்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 130640, பெண் வாக்காளர்கள் 140984, பிற வாக்காளர்கள் 33 என மொத்தம் 271657 வாக்காளர்கள் உள்ளனர்.

கிழக்கு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 122720, பெண் வாக்காளர்கள் 130817, பிற வாக்காளர்கள் 63 என மொத்தம் 253600 வாக்காளர்கள் உள்ளனர்.

Bismi

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 131023, பெண் வாக்காளர்கள் 136914, பிற வாக்காளர்கள் 60 என மொத்தம் 267997 வாக்காளர்கள் உள்ளனர்.

லால்குடி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 106034, பெண் வாக்காளர்கள் 113551, பிற வாக்காளர்கள் 21 என மொத்தம் 219606 வாக்காளர்கள் உள்ளனர்.

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 121391, பெண் வாக்காளர்கள் 130866, பிற வாக்காளர்கள் 43 என மொத்தம் 252300 வாக்காளர்கள் உள்ளனர்.

முசிறி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 107797, பெண் வாக்காளர்கள் 113241, பிற வாக்காளர்கள் 22 என மொத்தம் 221060 வாக்காளர்கள் உள்ளனர்.

துறையூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 107728, பெண் வாக்காளர்கள் 114814, பிற வாக்காளர்கள் 30 என மொத்தம் 222572 வாக்காளர்கள் உள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 11,11,573 ஆண் வாக்காளர்களும், 11,79,985 பெண் வாக்காளர்களும், 332 மாற்று பாலினத்தவர் என மொத்தம் 22,91,890 வாக்காளர்கள் உள்ளனர். 3,04,908 வாக்காளர்களுடன் திருச்சி மாவட்டத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக ஸ்ரீரங்கம் தொகுதியும் 2,19,606 வாக்காளர்களுடன் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக லால்குடி தொகுதியும் உள்ளது.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்