- Advertisement -

கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிறந்தநாள்: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம்!

Bismi

கார்த்தி சிதம்பரம் எம்.பி. பிறந்தநாள்: திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம்!

​திருச்சி: சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்தி ப. சிதம்பரம் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு, திருச்சி மாநகரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

​முன்னாள் மாணவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ராமநாதன் தலைமையிலும், மாணிக்கவேல், கே.டி. பிச்சமுத்து, ஏ.பி. ராஜவேல் ஆகியோர் முன்னிலையிலும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோவிலில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் மக்கள் பணியாற்ற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.

Vagai

- Advertisement -

​தொடர்ந்து, திருச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் முதியவர்களுக்குக் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

​இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் அவர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

​இந்நிகழ்வில் மாநில பேச்சாளர் சிவாஜி சண்முகம், அண்ணா சிலை விக்டர், அப்துல் குத்தூஸ், மலைக்கோட்டை கோட்டம் பசங்க பிரதாபன், மார்க்கெட் மாரியப்பன், நிர்மல் குமார், இ.பி. ரோடு சண்முகம், கோகுல் குமார், பாலு, மலைக்கோட்டை சொக்கலிங்கம், பாலமுருகன், உறையூர் விஜி சேகர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

​#KartiChidambaram #HBDKartiChidambaram #Congress #TNCC #TrichyNews #TrichyCongress #Annadhanam #திருச்சி #கார்த்திசிதம்பரம் #காங்கிரஸ்

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்