திருச்சி நாய் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் மாயம்: ஊழியர்கள் திறந்துவிட்டதாக விலங்கு நல ஆர்வலர் பகீர் புகார்!

திருச்சி நாய் காப்பகத்தில் 100-க்கும் மேற்பட்ட நாய்கள் மாயம்: ஊழியர்கள் திறந்துவிட்டதாக விலங்கு நல ஆர்வலர் பகீர் புகார்!
திருச்சி:
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நாய் காப்பகத்தில் அடைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட நாய்களை ஊழியர்களே கூண்டுகளைத் திறந்து வெளியேற்றிவிட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி விவரம்:
திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே உள்ள கோணக்கரை பகுதியில் மாநகராட்சி சார்பில் நாய்கள் காப்பகம் மற்றும் கருத்தடை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தீபாவளி பண்டிகையன்று அடைக்கப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட கூண்டுகள் திறக்கப்பட்டு, உள்ளே இருந்த 100-க்கும் மேற்பட்ட நாய்கள் திடீரென மாயமாகியுள்ளன.
விலங்கு நல ஆர்வலர் குற்றச்சாட்டு:
இது தொடர்பாக திருச்சி விலங்கு நல ஆர்வலர் அஜய் தெரிவித்ததாவது:
உணவின்றி தவிக்கும் சூழல்: மாநகரத்தின் பல பகுதிகளில் இருந்து பிடிக்கப்பட்டு அடைக்கப்பட்டிருந்த நாய்கள், திடீரென விடுவிக்கப்பட்டதால் அவை உணவின்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விதிமீறல் குற்றச்சாட்டு:
விலங்கு கருத்தடை விதிகளின்படி (ABC Rules) அறுவை சிகிச்சைக்குப் பின் நாய்கள் எங்கிருந்து பிடிக்கப்பட்டனவோ, அதே பகுதியில்தான் மீண்டும் விடப்பட வேண்டும். ஆனால் ஊழியர்கள் வேறு இடங்களில் விடுவதால் நாய்கள் இறப்பதாக ஏற்கனவே ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உள்விவகார மோதல்:
நாய் பிடிக்கும் ஊழியர்களுக்கும், காப்பக மேலாளர் மற்றும் மருத்துவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, “இனி வேலைக்கு வரமாட்டோம்” எனக் கூறிவிட்டு ஊழியர்களே கூண்டுகளைத் திறந்துவிட்டுச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான ஆதாரங்கள் கைவசம் இருப்பதாகவும், காப்பகத்தின் சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து தவறிழைத்த ஊழியர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
#Trichy #TrichyNews #StreetDogs #AnimalWelfare #TrichyCorporation #AnimalCruelty #SaveAnimals #ABCProgram #TamilNaduNews #BreakingNews





Comments are closed.