- Advertisement -

திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

Bismi

திருச்சியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு லட்சிய ஜனநாயக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை!

​திருச்சி:

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Vagai

​இதன் ஒரு பகுதியாக, லட்சிய ஜனநாயக கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக வருகை தந்து தேவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

- Advertisement -

​இந்நிகழ்வில், கட்சியின் திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் A. சசிகுமார் தலைமையில் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். இதில் மாவட்டப் பொருளாளர் A. ராஜ்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் S.K. ஆனந்த், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

​மேலும், ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் R.S. பூபதி, பகுதி துணைச் செயலாளர்கள் K. துரைசிங்கம், A. தங்கராஜ், பகுதி அவைத் தலைவர் P. கிருஷ்ணமூர்த்தி, D. தேவகி, ஸ்ரீரங்கம் வட்டச் செயலாளர்கள் செந்தில் (வார்டு 1), முத்து (வார்டு 5), குமரன் (வார்டு 6) ஆகியோர் கலந்து கொண்டனர்.

​இவர்களுடன் ஸ்ரீரங்கம் ஒன்றியச் செயலாளர்கள் மோகன்ராஜ், அருண், மணிகண்டன், மணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர்கள் நூறு பாஷா, ரஹமத், அரவிந்த் சுந்தர், மணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர்கள் இளமுருகன், பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

​அதேபோல், மணச்சநல்லூர் கிளைச் செயலாளர்கள் தினேஷ், ஹரிகரன், வெங்கடேஷ் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT Wing) அணியைச் சேர்ந்த கார்த்தி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

​#Tiruchirappalli #TrichyNews #MuthuramalingaThevar #ThevarJayanthi #ThevarGuruPooja #LDK #LakshiyaJananayagaKatchi #TamilNaduPolitics #TrichyPolitics

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்