பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக திருச்சி மாநகர காவல்துறை உதவியுடன் “வயம்” விழிப்புணர்வு குறும்படம்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக திருச்சி மாநகர காவல்துறை உதவியுடன் “வயம்” விழிப்புணர்வு குறும்படம்
திருச்சி மாநகர காவல்துறை, போலீஸ் பார்வை இதழ் வழங்கும் , “வயம்” – போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை Police Parvai News YouTube Chenal, Tamilnadu Aero SkatoBall Ball Association, KeeraiDheen YouTube Chenal இணைந்து S.வேல்முருகன் இயக்கத்தில் தயாரித்துள்ளது.
“வயம்” குறும்படத்தின் வாயிலாக நமது நாட்டின் எதிர்கால தூண்களாக திகழும் மாணவர்கள், போதை பொருட்களுக்கு அடிமையாகி, தனது வாழ்க்கையை சீரழித்து கொள்ளாமல், தனது குடும்பத்தின் உறவுகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதற்க்காக குறும்படம் எடுத்துள்ளனர். “வயம்” குறும்படத்தை பார்ப்பவர்களுக்கு இனிமேல் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது, பயன்படுத்தினால் நமது குடும்பத்திலும் நடந்துவிடும் என்ற உணர்வு வரும் அளவிற்கு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைவரும் நடித்துள்ளனர்,
திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் M.சத்யபிரியா IPS அவர்கள் அனுமதியுடன், “வயம்” விழிப்புணர்வு குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது, அத்துடன் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தில் காவல் துறை ஆதிகாரிகள் நடித்து தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர், திருச்சி ரமேஷ் அப்பாவாக நடித்துள்ளார், மேலும் குறும்படத்தில் நடித்துள்ள கலைஞர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். “வயம்” போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் , போதை மறுவாழ்வு மையங்களில் உள்ள நபர்களுக்கும் புரியும் வகையில் திரையிட்டு, அவர்களின் வாழ்க்கையை புதியபாதையில் மாற்றம் செய்வதற்காக, காவல்துறை உதவியுடன் வெளியிட குறும்பட குழுவினர் திட்டமிட்டு உள்ளனர் .