- Advertisement -

பிரபல நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார்.

0

- Advertisement -

பிரபல நடிகர் கசான் கான் மாரடைப்பால் காலமானார்.

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கசான் கான்.

1992-ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான செந்தமிழ் பாட்டு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகர் கசான் கான், கமல்ஹாசனின் கலைஞன், சரத் குமாரின் வேடன் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

Vagai
Bismi

விஜயகாந்த்தின் சேதுபதி ஐபிஎஸ், வானத்தைப் போல, வல்லரசு, நரசிம்மா, விஜய்யின் பிரியமானவளே, பத்ரி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்து மக்களிடையே பிரபலமானாவர் நடிகர் கசான் கான்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பில் கசான் கான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கசான் கானின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum
Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்