- Advertisement -

ஆதரவற்ற மூதாட்டி மரணம், மனிதநேயத்துடன் நல்லடக்கம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

- Advertisement -

ஆதரவற்ற மூதாட்டி மரணம், மனிதநேயத்துடன் நல்லடக்கம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

 

​திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், கே.கள்ளிக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட அருவாக்குடி கிராமத்தில் உள்ள பெரிய குளத்தின் கரையை ஒட்டி, சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பெயர், விலாசம் தெரியாத நிலையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

 

​இதனைப் பார்த்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கிராமத்தாரின் உதவியுடன் தீயணைப்பு படைப் பிரிவினர் அந்த மூதாட்டியை மீட்டனர். தொடர்ந்து அவரது உயிரைக் காக்கும் நோக்கில், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

Vagai

​சிகிச்சை பலனின்றி மரணம்:

​மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வு (Post-mortem) செய்யப்பட்டது. ஆனால், உயிரிழந்த மூதாட்டியின் உடலை உரிமை கோரி உறவினர்கள் யாரும் வரவில்லை.

 

​தேடி வந்த மனிதநேயம்:

​உரிமை கோரப்படாத அந்த ஆதரவற்ற மூதாட்டியின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்து நல்லடக்கம் செய்ய திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன் முன்வந்தார்.

Bismi

​ஆதரவற்ற உடல்களைத் தொடர்ந்து நல்லடக்கம் செய்து வரும்

“திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை”யின் நிர்வாக அறங்காவலரும், யோகா ஆசிரியருமான விஜயகுமாருக்கு இதுகுறித்து அவர் தகவல் தெரிவித்தார்.

 

​மனிதாபிமானத்துடன் நடந்த நல்லடக்கம்:

​அந்தத் தகவலின் அடிப்படையில், திருச்சி தென்னூர், அண்ணா நகர் பகுதியில் உள்ள குழுமிக்கரை மயானத்தில், உரிமை கோரப்படாத அந்த ஆதரவற்ற மூதாட்டியின் பிரேதம் கொண்டு வரப்பட்டது.

​ராம்ஜி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வாசுதேவன் முன்னிலையில், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அந்த மூதாட்டியின் உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதிச் சடங்குகளைச் செய்து

 

நல்லடக்கம் செய்தார்.

​உறவுகள் யாரும் இல்லாத நிலையிலும், அந்த மூதாட்டியின் உடலைத் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர் போலக் கருதி நல்லடக்கம் செய்த காவல் உதவி ஆய்வாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரின் இந்த மனிதாபிமானச் செயல் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

 

​#Trichy #Humanity #SocialService #TrichyPolice #AmirthamTrust #RespectTheDead #Maniyathuvam #TrichyNews #SocialActivist

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்