திருச்சியில் சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில், சமூக ஆர்வலர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கினர்.
போதை ஒழிப்பு வாழ்வின் சிறப்பு போதை இல்லா தமிழகமாக இளை ஞர்களை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வு பிரதியை திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோட்டிஸ் வினியோக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பு மாநில சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சி.பி ரமேஷ் தலைமையில், சமூக ஆர்வளர் முனைவர் பா.ஜான்ராஜ்குமார் மற்றும் கண்டோன்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் பாஸ்கர், நாராயணராவ், ரவிசந்திரன் மற்றும் பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் நிறுவன தலைவர் வேல்முருகன், தனபால்,வெங்கடேசராவ்,நந்தகுமார் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நோட்டிஸ் வினியோகம் செய்தனர். அப்போது சமூக ஆர்வலர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் கூறுகையில் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் முற்றிலும் போதையில் இருந்து விடுபட்டால் அவர்கள் வாழ்க்கையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையும், போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு உதவிய காவல்துறை அனைவருக்கும் நன்றி தெரிவித்தார், இதனை தொடர்ந்து வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்கள் முழுவதும் விழிப்புணர்வு நோட்டீசை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.