முத்தரையரின் மணிமண்டபத்தை திறக்க கோரி திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழாவிற்கு முன்னரே திறக்கப்பட வேண்டிய நிலையில், ஓராண்டு காலத்திற்கு மேலாகியும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.
ஆகவே வருகின்ற மே-23ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவிற்கு முன்னதாக மணிமண்டபத்தை திறக்க ஆவணம் செய்யுமாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனு அளிக்க திருச்சி மாவட்ட பாஜக மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் உடன் கலந்துக்கொண்டவர்கள் மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட பொதுசெயலாளர்கள் காளீஸ்வரன், ஒண்டி முத்து பொன். தண்டபாணி. மாவட்ட நிர்வாகிகள் சந்துரு, மணிமொழி சர்வேஸ்வரன் , ஜெயந்தி நாகேந்திரன் , வேளாங்கண்ணி, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் சி. இந்திரன், பாலக்கரை.மண்டல் தலைவர் மல்லி செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.