“அடிப்படைப் பிரச்சனைக்கே ஆளில்லை.. தேர்தல் நேரத்தில் மட்டும் பிரியாணியா? கதிரவன் மீது மக்கள் கோபம்!”
மண்ணச்சநல்லூர்: வாக்குறுதி கொடுத்த கதிரவன்… கைவிட்ட மக்கள்! 2026-ல் வீழ்வாரா எம்.எல்.ஏ?

மண்ணச்சநல்லூர் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் மீண்டும் முன்னாள் எம்.எல்.ஏ கதிரவன் போட்டியிடுகிறார், ஆனால் அவருக்கு எதிராகப் பலத்த எதிர்ப்புக் குரல்கள் எழுந்து வருகின்றன. கடந்த முறை “யார் என்றே தெரியாத வேட்பாளர்” என்ற விமர்சனத்தைத் தாண்டி வெற்றி பெற்றவர், இந்த முறை சொந்த தொகுதி மக்களாலேயே புறக்கணிக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நேர வாக்குறுதிகளும்.. தற்போதைய ஏமாற்றமும்!
கடந்த தேர்தலின் போது, அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் சாதுர்யமான வியூகத்தினால் கதிரவன் வெற்றி பெற்றார். குறிப்பாக, சமயபுரத்தில் தான் கட்டும் மருத்துவமனையில் ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு குறைகளை முன்னின்று அதை சீர் செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்ததாலும்,
ஜாதி சங்கங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ஆதரவைப் பெற்று வெற்றி பெறச் செய்தார்.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு:
தொகுதியின் அடிப்படைத் தேவையான குடிநீர் பிரச்சினைக்குக் கூட கதிரவன் குரல் கொடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மருத்துவமனை புகார்:
“இலவச மருத்துவம்” என்பது வெறும் கண்துடைப்பு என மக்கள் கொதிக்கின்றனர். சாதாரண காய்ச்சலுக்குச் சென்றால் கூட, உள்நோயாளியாக (Admission) அனுமதித்து ஒரு வாரம் வரை சிகிச்சை பெற வைப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அறுவை சிகிச்சை சர்ச்சை: பிரசவத்திற்கு வருபவர்களுக்குப் பரிசுப் பொருட்கள் தருவதாகக் கூறிவிட்டு, தேவையற்ற அறுவை சிகிச்சைகளை (C-Section) மேற்கொள்ளத் தூண்டுவதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

இவை அனைத்திற்கும் மேலாக கிட்னி திருட்டு போன்ற செயல்கள், அந்த மருத்துவமனை மீது நிலவும் பல்வேறு சர்ச்சைக்குரிய புகார்கள், மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் நேருவின் ஒதுக்கம்:
வெற்றி வாய்ப்பு மங்குமா?
கடந்த முறை கதிரவனைத் தூக்கிப் பிடித்த அமைச்சர் கே.என்.நேரு அவர்களை, வெற்றிக்குப் பிறகு கதிரவன் மதிக்காமல் தலைமைக்கு நெருக்கமாகச் சென்றது அமைச்சரின் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த முறை கதிரவனுக்காக முழு மனதுடன் தேர்தல் வேலைகளில் இறங்க அமைச்சர் நேரு தயக்கம் காட்டுவதாகத் தெரிகிறது.
இது கதிரவனின் வெற்றி வாய்ப்பைப் பெருமளவில் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது.
மாணவர்களைப் பயன்படுத்துவதா? வலுக்கும் குற்றச்சாட்டுகள்
சமீபத்தில், கல்லூரி மாணவர்களுக்கு ரூபாய் 10,000, பிரியாணி பொட்டலங்கள் கொடுத்து, அவர்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு கதிரவன் தரப்பு பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், திமுக நிர்வாகி ஒருவர் கிராம மக்களிடத்தில் “வாக்களிக்கவில்லை என்றால் வெட்டுவேன்” என மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது, மக்களிடையே அச்சத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முத்தரையர் சமூக வாக்குகளில் பெரும் மாற்றம்?
கடந்த முறை கதிரவனின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்த முத்தரையர் சமூக இளைஞர்கள், இந்த முறை அங்கிருந்து விலகி வருகின்றனர். குறிப்பாக, சிங்கத்தமிழர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்.வி. பரதன் (திரைப்பட நடிகர் மற்றும் ஆர்.விஸ்வநாதன் அவர்களின் மகன்) களமிறங்கப் போவதாகத் தகவல்கள் வெளியானவுடன், கதிரவனை ஆதரித்த பல இளைஞர்கள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர்.
அரசியல் கணிப்பு:
அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காதது, மருத்துவமனை மீதான புகார்கள், அமைச்சரின் ஆதரவு குறைவு மற்றும் மாற்றுத் தலைவர்களின் எழுச்சி எனப் பல காரணங்களால், இந்த முறை மண்ணச்சநல்லூர் தொகுதியில் கதிரவனுக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே தெரிகிறது. “எங்கள் ஓட்டு இவருக்கு இல்லை” எனப் பல கிராமங்கள் ஒருமித்த குரலில் கூறி வருவது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#MannachanallurElection2026 #TrichyPolitics #DMKResistance #KathiravanIssues #TNPolitics #ElectionNews #PublicOutrage #MannachanallurConstituency





Comments are closed.