மக்காச்சோளத்திற்கு 24,00 ரூபாய் விலை வழங்கக் கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மக்காச் சோளம் முட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
மக்காச்சோளத்திற்கு 24,00 ரூபாய் விலை வழங்கக் கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் மக்காச் சோளம் முட்டைக்கு மாலை அணிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மக்காச்சோளத்திற்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விடக் குறைவான விலைக்குத் தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வதைக் கண்டித்து, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் பு.விஸ்வநாதன் தலைமையில்

விவசாயிகள் மக்காச்சோள முட்டைக்கு மாலை அணிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
போராட்டம் நடத்தினர். மேலும் மாநில அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

இதில் மத்திய அரசு மக்காச்சோளத்திற்கு ஒரு குவிண்டாலுக்கு ₹2400 என விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தனியார் வியாபாரிகள் அடிமாட்டு விலையாக ₹1800 முதல் ₹1900 வரை மட்டுமே கொடுத்துக் கொள்முதல் செய்கின்றனர்.
உரிய விலை கிடைக்காததால் மக்காச்சோள சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அவர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அமைச்சரவை கூடி விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறது. அந்த விலை விவசாயிகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய மாநில அரசும், மாவட்ட ஆட்சியர்களும், வேளாண் மார்க்கெட்டிங் பிரிவினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, மத்திய அரசு அறிவித்துள்ள ₹2400 என்ற விலையை மக்காச்சோள விவசாயிகளுக்குப் பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பு. விசுவநாதன் அவர்கள் தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.





Comments are closed.