ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையினை உபயோகமாகக் கழிக்க கோடை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மே 1 முதல் 6 வரை நடபெற இருக்கும் இந்த முகாமில், இரண்டு பயிற்ச்சி வகுப்புகள் நடக்கவிருக்கின்றன.
1.MIND GYM என்ற பெயரில் மாணாக்கர்களின் வலது மூளை செயல் திறனை அதிகரிக்கும் பயிற்சிகளும், தன்னம்பிக்கையுடன் தலைமை பொறுப்பேற்று, குழுவாக இணைந்து செயல்படும் பயிற்சிகளும் அளிக்கப் படும்.
2.EXPOSURE TO DIGITAL WORLD என்ற மற்றொரு நிகழ்வில், மாணாக்கர்களின் படிப்புத் திறன் அதிகரிக்கும் வகையில், எமது DIGITAL LIBRARY மூலம் கோடிக்கணக்கான புத்தகங்களை பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப் படும்.
விருப்பமுள்ள மாணவர்கள், பெற்றோர் சம்மதத்துடன் இந்த நிகழ்சிகளில் பங்கேற்று பலன் பெறும் வண்ணம் நிகழ்வுகள் அமைக்கப் பட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் உறுப்பினர்களான G குமார் மற்றும் R செல்வராஜ் இந்த நிகழ்சிகளை ஒருங்கிணைத்து நடத்தவிருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக
01-05-2023 அன்று, ஸ்ரீரங்கம் கல்வி குழுமத்தின் தலைவர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலர் கஸ்துரிரங்கன் துவக்கி வைத்தார். உறுப்பு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வெங்கடேஷ் வரவேற்புரை வழங்கினார்,நிகழ்ச்சியின் இறுதியில் மீனலோசனி நன்றியுரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் பொருளாளர் கிரி, ஸ்ரீரங்கம் ரோட்டரி கிளப் தலைவர் சத்யநாராயணன்,ஆசிரியர் புவனேஸ்வரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
06-05-2023 அன்று, பயிற்சிகளின் முடிவு நிகழ்ச்சி, ஸ்ரீர்ங்கம் கல்வி குழுமத்தின் உறுப்பினர் வரதராஜன் தலைமையில் நடைபெறுகிறது. குமார் அவர்கள் நிகழ்வுகளின் தொகுப்புரை அளிக்க,செல்வராஜ் அவர்களின் நன்றியுரையுடன் கோடை வகுப்புகள் முடிவுறுகின்றன.