பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது,
பெனிட்ரான் பிராடக்ட்ஸ், மண் திருத்தம் மற்றும் சுற்றுச்சூழல் குறைப்பு அமைப்புகள் மூலமாக, பெனிட்ரான் விவசாய மண்ணில் கார்பனை மீட்டெடுக்க முயற்சிதன் மூலம் பூலோகத்தை பசுமையாக்க முயற்சிக்கிறது, இதன் அடிப்படையில் பொதுமக்களிடத்தில் விழிப்புணர் ஏற்படுத்துவதற்காக, திருச்சி கலையரங்கத்தில் தனியார் வேளாண் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியினை காண வரும் பொது மக்களிடத்தில் மண்ணில் குறைந்து வரும் கரிம வளத்தை பற்றியும் தற்போது உள்ளே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் என்ன மாதிரியான நிலை ஏற்படும் என்பதை பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்து அதற்கான நிரந்தர தீர்வுகளையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அரங்கினை பெனிட்ரான் சிஇஓ ராபர்ட்,இயக்குனர் சுரேஷ், தேசிய ஆலோசகர் சங்கர்,ஆனந்த், பிரபாகரன், சரவணன்,ரவி லட்சுமி நாராயணன், ராகேஷ் உள்பட பலர் சிறப்பாக அமைத்திருந்தனர்.