திருச்சி இடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளி 71வது ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியை க.தனலெட்சுமி வரவேற்புரையாற்றினார்.
மணிகண்டம் வட்டார கல்வி அதிகாரி ரா.தமிழ்ச்செல்வன் தலைமை உரையாற்றினார். கலைமகள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஏஞ்சலினோ ஜெயா, ஜேகேசி அறக்கட்டளை கௌரவத் தலைவர் பேராசிரியர் பி.ரவிசேகர்,ஜே கே சி அறக்கட்டளை தலைவர் கல்வியாளர் முனைவர் பா. ஜான் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் க.ப.சாந்தி நன்றி கூறினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் ஆரோக்கியமேரி, சிறிய புஷ்பம், விஜி, மஞ்சுளா உப்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி ஜீனத், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், ஆடல் பாடல் மற்றும் கவிதை, கட்டுரைகள் வாசிக்கப்பட்டது. அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள். முன்னதாக கலைமகள் தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது. இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சுமார் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.