கிடுகிடுவென ரூ .1 லட்சம் உச்சத்தை தொட்ட தங்கம் விலை!
கிடுகிடுவென ரூ .1 லட்சம் உச்சத்தை தொட்ட தங்கம் விலை!
தங்கம் விலை கடந்த மாதம் நவம்பர் வரை சற்று குறைந்திருந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் உயரத் தொடங்கியது. விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.99 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 515-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.இதுவரை இல்லாத வகையில் தங்கம் விலை அதிகரித்து வரலாறு காணாத புதிய உச்சத்தையும், ஒரு சவரன் ரூ.1 லட்சம் என்ற இமயமலை உச்சத்தையும் எட்டி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
உலக சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரிப்பு, பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால், பெருமுதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தையே சார்ந்து இருப்பது, அதிலும் சமீபத்தில் அமெரிக்காவில் மத்திய பெடரல் வங்கி, வட்டி விகிதத்தை குறைத்ததன் விளைவால், தங்கம் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் காணுகிறது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,770-க்கும் சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ரூ.1,02,160-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அந்த வகையில் இன்று வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 234 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் வெள்ளி வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையாகிறது.


Comments are closed.