அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை !
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் தமிழக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை !
அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிளுடன் தமிழக அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை தொடங்கியது.10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

தி.மு.க.ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்; அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும்’ என, கடந்த சட்டசபை தேர்தலின் போது,தி.மு.க கட்சி தரப்பில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
தி.மு.க.ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் முடிய உள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அரசு ஊழியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தற்செயல் விடுப்பு என்று தொடர் போராட்டத்தை ஆசிரியர் சங்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 22) சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகிய 3 பேர் கொண்ட குழுவினர், ஜேக்டோ ஜியோ எனப்படும் அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை
நடத்தி வருகின்றனர்.பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊழியம், சமவேலை சம ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை தொடர்பாக அமைச்சர்களுடன் அரசு ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Comments are closed.