திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில், சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!

திருநெல்வேலி வழக்கறிஞர், முனைவர் பிரிசில்லா பாண்டியன் தலைமையில்,சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற, கிறிஸ்துமஸ் பெருவிழா!

திருநெல்வேலி,டிசம்பர் 18:-

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் சார்பில், புதன்கிழமை ( டிசம்பர். 17) மாலையில், பார்கவுன்சில் வளாகத்தில், “கிறிஸ்துமஸ் பெருவிழா” கோலாகலமாக நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாக குழு தலைவர் வழக்கறிஞர், முனைவர் ஜா.பிரிசில்லா பாண்டியன் தலைமையில், மிகப்பிரமாதமாக சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில், முதலாவதாக பிரிசில்லா பாண்டியன், அனைவரையும், அன்புடன் வரவேற்றார். பின்னர், கிறிஸ்துமஸ் பெருவிழா உரை நிகழ்த்தி, அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை, மகிழ்வுடன் தெரிவித்தார்.

Bismi

விழாவில்,சிறப்பு அழைப்பாளராக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, நீதியரசர் D.பாரத சக்கரவர்த்தி பங்கேற்று, “மனிதநேயம்” குறித்து, சிறப்புரை நிகழ்த்தினார்.”நினைவு பரிசுகள்” வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்,

தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் அமல்ராஜ், “பார் கவுன்சில் ஆப் இண்டியா” (BCI) துணை தலைவர் S. பிரபாகரன், வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் பெண் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள், பார் கவுன்சில் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என பலரும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்