தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சியில் இன்று (டிசம்பர் 15) மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்க கூடாது , மருந்து விலை நிர்ணயம் ஏழை எளிய மக்களை பாதிக்காத வகையில் உருவாக்க வேண்டும், சுகாதாரத்திற்காக ஒன்றிய அரசு ஒதுக்கக்கூடிய நிதியை மேலும் உயர்த்த வேண்டும் என்றும், ஒன்றிய அரசு தொழிலாளர்களான தங்களுக்கு பாதுகாப்பாக இருந்த 29 தொழிலாளர் நல சட்டங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாக 4 தொகுப்புகளாக மாற்றி முழுமையாக அமல்படுத்த முடிவெடுத்துள்ளனர்.

Bismi

அரசின் இந்த முடிவு எங்களுடைய எதிர்காலத்தையும் குடும்பத்தின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எனவே ஒன்றிய அரசு இந்த 4 சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும், மருந்து விற்பனை பிரதிநிதிகளுக்கு பொருந்தக்கூடிய சட்டமான விற்பனை அபிவிருத்தி பணியாளர்கள் சட்டம் 1976 ஐ மாற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .நாளை சென்னையில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

ஒன்றிய அரசு எங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் அனைத்து மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தனர்.

பேட்டி – சத்தியநாராயணன், தலைவர். தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கம்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்