தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த, லாரி விபத்துக்குள்ளானது!
மூன்று மணி நேரம் முற்றிலுமாக போக்குவரத்து பாதிப்பு!
தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த, லாரி விபத்துக்குள்ளானது!
மூன்று மணி நேரம் முற்றிலுமாக போக்குவரத்து பாதிப்பு!

திருநெல்வேலி,டிசம்பர் 9:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, நிலக்கரி ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் கொல்லத்திற்கு லாரி ஒன்று சென்று, டிசம்பர் 9 அதிகாலையில்,கொண்டிருந்தது. அப்போது திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய, நான்குவழி நெடுஞ்சாலையில், பணகுடி அருகே இந்த லாரி வரும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், மோதிய லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தேசிய நான்கு வழிச்சாலையில், உருண்டோடியது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் சிறுசிறு காயங்களுடன், உயிர் தப்பினார். விபத்தை நேரில் பார்த்த, நான்கு வழிச்சாலை காப்பாளர்கள் ஓடி வந்து, சிறிய வகை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், நிலக்கரியை மற்றொரு லாரிக்கு மாற்றினர்.
இந்த சம்பவத்தால், திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய, நான்குவழி நெடுஞ்சாலையில் போக்குவரத்து, தொடர்ந்து 3 மணிநேரம் கடுமையாக, பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்றுப் பாதையில், திருப்பி விடப்பட்டன. இச்சம்பவம் குறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் மேலப்பாளையம் ஹஸன்.


Comments are closed.