நெருங்கும் சட்டசபைத் தேர்தல்! விருப்ப மனு பெறும் தேதியை அறிவித்தது அதிமுக.

நெருங்கும் சட்டசபைத் தேர்தல்! விருப்ப மனு பெறும் தேதியை அறிவித்தது அதிமுக.

Bismi

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு 2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் கூட்டணி ஜனவரி மாதத்தில் முடிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சட்டசபை தேர்தலையொட்டி வருகிற டிசம்பர் 15-ந்தேதி விருப்பமனுவை பெறலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ளது. வருகிற 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோர் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுவை பெற்றுக்கொள்ளலாம்.
அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களை தெளிவாகப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்