திருமயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், சிடி ஸ்கேன் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!
திருமயம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், சிடி ஸ்கேன் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் ரூபாய் 10 கோடியில் கட்டப்பட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் இம்மருத்துவமனை திறந்ததிலிருந்து புத்தம் புது பொலிவுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது உள்ள மருத்துவர்கள் ஸ்டாப் நர்ஸ் வேலையாட்கள் மிக மிகக் குறைவாக இருப்பதால் மருத்துவமனையில் மருத்துவர்களும் செவிலியர்களும் இரவு பகல் பாராமல் வேலை பார்த்து வருகிறார்கள்.இந்நிலையில் மேலும் காரைக்குடியில் இருந்து புதுகை செல்லும் பைபாஸ் சாலையில் அதிகமான விபத்து ஏற்பட்டு கொண்டிருக்கிறபடியால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை திருமயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது. இவர்களை நன்கு கவனித்து உயிர்காக்க போதுமான வேலை ஆட்கள் மருத்துவர்கள் செவிலியர்கள் பற்றாக்குறைவாக இருக்கின்றனர் .ஆகவே இம்மருத்துவமனைக்கு 10 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் 10 வேலையாட்கள், எலும்பு மருத்துவர் ஆகியோர் தேவை என்பதையும் மற்றும் நோயாளிகளுக்கு தலையில் அடிபட்டால் வெளியிடத்தில் சென்று சிடி ஸ்கேன் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே இம்மருத்துவமனைக்கு சிடி ஸ்கேன் அவசியம் தேவை என்பதை பொதுமக்கள் கோரிக்கையாக வலியுறுத்தப்படுகிறது. இவை அனைத்தும் நிறுவப்பட்டால் புதுக்கோட்டை மெடிக்கல் காலேஜ் மருத்துவமனை போல் செயல்பட உறுதுணையாக இருக்கும் என பொதுமக்களும் மற்றும் சமூக ஆர்வலர்களுடைய கோரிக்கை . இவை அனைத்தும் முக்கியம் வாய்ந்தது என தமிழக அரசை பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர் .
நோயாளிகள் புதுக்கோட்டை மாநகரம் செல்லாத அளவுக்கு மருத்துவர்கள், ஸ்டாப் நர்ஸ், வேலையாட்கள், சிடி ஸ்கேன் அனைத்தும் திருமயம் மருத்துவமனைக்கு வருவதற்கு தமிழக அரசு முன் வர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Comments are closed.