விஜய் – பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது- செல்வப்பெருந்தகை பதில்

விஜய் – பிரவீன் சக்கரவர்த்தி சந்திப்பு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது- செல்வப்பெருந்தகை பதில்

விஜய்யை சந்திக்க பிரவின் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை, பேசவும் சொல்லவில்லை.எங்களுடைய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Bismi

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக திமுக , அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு போன்ற தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக ,காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் மற்றும் ராகுல் காந்தியின் நெருங்கிய இணைப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி, சென்னை பனையூர் பகுதியில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜயை சந்தித்தார் என்ற தகவல் நேற்று (டிசம்பர் 5) வெளியானது. சமீபத்தில், காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவினர், சென்னை, அறிவாலயம் சென்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிவிட்டு வந்த நிலையில், பிரவீனின் இந்த நகர்வானது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது குறித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது: விஜய் – பிரவீன் சக்கரவர்த்தியின் சந்திப்பு குறித்து எனக்குத் தெரியாது. திமுகவுடன பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். விஜய்யை சந்திக்க பிரவின் சக்கரவர்த்திக்கு நாங்கள் அனுமதி தரவில்லை, பேசவும் சொல்லவில்லை. இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது, இரும்புக் கோட்டை போன்று உள்ளது. இண்டியா கூட்டணியை சிதைக்க முடியாது.

எங்களுடைய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் செய்கிறோம். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், பிரவீன் சக்கரவர்த்தி, விஜய்யை சென்று சந்தித்தற்கு ஏதேனும் புகைப்படங்கள் இருக்கிறதா?அப்படி அவர் சந்தித்திருந்தால், அகில இந்திய தலைமை அதுகுறித்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்