அண்ணல் அம்பேத்கர் வாழ்வு ஒரு பாடம் – முதல்வர் ஸ்டாலின்
அண்ணல் அம்பேத்கர் வாழ்வு ஒரு பாடம் – முதல்வர் ஸ்டாலின்
அண்ணல் அம்பேத்கரின் வாழ்வே ஒரு பாடம். அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம். அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கரின் 70-வது நினைவு தினம் இன்று (டிசம்பர் 6) அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி அவரது உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் அம்பேத்கர் குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த பதிவில்,புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்! எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
அவரது வாழ்வே ஒரு பாடம்!
அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments are closed.