தாய்லாந்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் .
தாய்லாந்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் .
தாய்லாந்தில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருக்கு சொந்த ஊர் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கே.பெரியபட்டியைச் சேர்ந்த ஜெயராமனின் மகன் திலீப். பளு தூக்கும் வீரரான இவர் கடந்த 26 ம் தேதி முதல் 30 ம்தேதி வரை தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக ஜூனியர் அணிகளுக்கான பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்றார். உலக அளவிலான இப்போட்டியில் 11 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து கலந்து கொண்ட திலீப் 74 வது வகையில் நடந்த போட்டியில் இரண்டு பிரிவிலும் தங்கம் வென்று இந்தியவுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
பதக்கம் வென்று இன்று சொந்த ஊர் திரும்பிய திலீப்பிற்கு ஊர்மக்கள் திரண்டு வந்து மேள தாளங்கள் முழங்க பட்டாசு, வெடித்தும் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மலர் மாலை மற்றும் மலர் தொப்பி அணிவித்து வாழ்த்தினார். தொடர்ந்தது ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மக்கள் திரண்டு வந்து வாழ்த்து தெரிவித்தனர். அரசுப்பள்ளி பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வமுடன் வந்து திலீப்பிற்கு வாழ்த்து தெரிவித்தும் அவருடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டனர். தனது பயிற்சியாளருக்கும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருக்கும், தமிழக அரசுக்கும் திலீப் நன்றி தெரிவித்துக்கொண்டார். மேலும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினருடன் மற்றும் கிழக்கு ஒன்றிய செயலாளர் SAS ஆரோக்கியசாமி சென்று துணை முதல்வரை சந்தித்து விரைவில் வாழ்த்து பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.
உலக அளவிலான போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற வீரருக்கு ஊர்மக்கள் உற்சாக வரவேற்பு அளித்த சம்பவம் மண்ப்பாறை பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.


Comments are closed.