அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு துணை நிற்போம் அமைச்சர் தேனி ஜெயக்குமார் உறுதி-உலக அக்குபஞ்சர் தினவிழா புதுச்சேரி

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு துணை நிற்போம் அமைச்சர் தேனி ஜெயக்குமார் உறுதி-உலக அக்குபஞ்சர் தினவிழா புதுச்சேரி

தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மற்றும் கேர் & க்யூர் அகாடமி ஆப் கிளாசிகல் அக்குபஞ்சர் இணைத்து நடத்திய உலக அக்குபஞ்சர் தினவிழா புதுச்சேரியில் நடைபெற்றது.

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய குழு உறுப்பினர், சோழன் பார்வை செய்தி இதழ் இணை ஆசிரியர், தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் தலைவர், கலியுக சித்தர் டாக்டர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

Bismi

நிகழ்ச்சியில் முன்னாள் சுகாதாரக் குழு தலைவர் டாக்டர் தமிழரசி சுப்பையா மற்றும் புதுச்சேரி அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் முனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் கேர் & க்யூர் முதல்வர் டாக்டர் மகேஷ் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் வேளான்துறை அமைச்சர் தேனி ஜெயகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார்.

தொடர்ந்து மருத்துவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ், புதுச்சேரி யூனியன் தலைவர் தோழர் எம்.பி.மதிமகாராஜா, தேசிய குழு உறுப்பினர் எம்.டி.இராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில், சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் விஜய் கார்த்திக் நன்றியுரை வழங்கினார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சுபாஷ் மற்றும் தேசிய குழு உறுப்பினர் ராமலிங்கம் மற்றும் புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் மதிமா ராஜா ஆகியோருக்கு அன்னை தெரசா விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு

டாக்டர் ஜெயசூர்யா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் சித்தா அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு என்றும் துணை நிற்போம் என்று உறுதி அளித்தார்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்