மணப்பாறையில் தலையில் வெட்டு, உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுடன் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்.
மணப்பாறையில் தலையில் வெட்டு, உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுடன் மீட்கப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டவர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி அருகேயுள்ள புளியங்காடு பகுதியில் அரை நிர்வாணத்தில் ஆண் ஒருவர் உடலில் ரத்த காயங்களுடன் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரை மீட்டு தனியார் மீட்புக்குழு ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார், மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர், முத்தன் தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் சசிக்குமார்(49) என்பதும், கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும், வியாழக்கிழமை மாலை மர்ம நபர்களால் சம்பவ இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தலையில் அடித்து ரத்த காயமும், கைகளில் சில இடங்களை கட்டையாலும், கல்லில் வைத்து உடைத்தும் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தியிருந்ததும் தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார், மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.


Comments are closed.