அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ யார் ? -ரசிகர்கள் உற்சாகம்
அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ யார் ? -ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் சிலம்பரசன் ‘தக் லைப்’ திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. இயக்குநர் வெற்றி மாறன் ‘வடசென்னை’ படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். வெற்றிமாறன் எந்தவொரு படத்தைத் தொடங்கினாலும், அது வெறும் பொழுதுபோக்குச் சினிமாவாக மட்டும் இருப்பதில்லை, அது ஒரு கருத்தியல் ஆவணமாக இருக்கும். ‘அரசன்’ படத்துக்காக அவர் சிம்புவுடன் இணைந்தபோது, சிம்புவின் வழக்கமான பாணியை விடுத்து, அவரை முற்றிலும் புதிய பரிமாணத்தில் காட்சிப்படுத்துவார் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் எழுந்தது.
சிம்புவும், சமீபகாலமாகத் தனது படத் தேர்வுகளில் ஆழமான மாற்றங்களைச் செய்து வருகிறார்.இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், ‘அரசன்’ படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோ வரவேற்பை பெற்றது. மேலும் ‘அரசன்’ படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், ‘அரசன்’ படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


Comments are closed.