தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

 

தெரு நாய்களால் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதால் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், விலங்கின ஆர்வலர்கள் இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.உலகத்தின் தொன்மையான நாய் இனத்தை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. பாதுகாக்காமல் அழிக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது . கல் தோன்றி மண்தோன்றா காலத்தை நாடுகளும், மொழிகளும் உருவாவதற்கு முன்பிருந்து பூமியில் ஆதி மனிதர்களோடு வாழ்ந்து வந்திருக்கும் இந்த நாய்களை பாதுகாக்காமல் ரயில் நிலையம், விமான நிலையம், காவல் நிலையம், மருத்துவமனை போன்ற இடங்களில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கை என்பது நாளை தேருவில் உள்ள பூங்கா, ரேஷன் கடை, டீக்கடை, தபால் ஆபீஸ் போன்ற இடங்களுக்கும் இது பொருத்தமாகிவிடும்.

Bismi

இந்த நிலையில் இன்று விலங்கு நல ஆர்வலர்கள் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் எதிரே தெருநாய்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் அவற்றை காப்பகங்களில் அடைக்கக் கூடாது என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

 

தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யலாம் ஆனால் அவற்றை காப்பகங்களில் அடைக்கக் கூடாது, அவ்வாறு அடைத்தால் தெரு நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டு அவை உயிரிழக்கநேரிடும். கலப்பின நாய்களை எடுத்து வளர்க்கும் மக்கள் நாட்டு நாய்களையும் வளர்த்தால் நாட்டு நாய்களை காப்பாற்றமுடியும், நாய்களை அதன் இருப்பிடத்திலேயே விட்டு விடுங்கள் அப்போதுதான் அனைவருக்கும் அது நன்றாக இருக்கும் என வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்இந்த நாய்கள் தொல்குடிகள், கீழடி ஆதிச்சநல்லூர் போன்ற முடிந்து போன நம் தொன்மையான பெருமைகளை ஆராய்ச்சி செய்யும் அதே நேரம் நம்மோடு இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் பூர்வகுடி நாய்களுக்கு ஆதி அந்தஸ்து வழங்கி அதை பாதுகாக்குமாறு இந்த ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்றத்தை வலியுறுத்துகிறது. இது தெரு நாய் அல்ல! உலகத்தின் பூர்வகுடி நாய். இயற்கையாகவே தன் துணையை தேர்வு செய்து மருத்துவ உதவி சரியான உணவு இல்லாமல் தனது ஊக்கத்தால் கொலைகளையும் கருத்தடைகளையும் மீறி சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட் என்ற கோட்பாட்டிற்கு ஏற்றவாறு வாழ்ந்து வந்துவிட்டது. இதன் திறமையையும், இனத் தொன்மையையும், உடல் வலிமையையும், அரசாங்கம் ஆய்வு செய்து நம் நாட்டின் பெருமைக்குறிய ஆதி மனிதனின் நண்பன் மற்றும் ஆதி இன நாய்களை உரிய அந்தஸ்துடன் ஆவணம் செய்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

ஆர்ப்பாட்டத்தில் விலங்கு நல ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் அர்ச்சனா,பிரியா, பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்பின் தலைவர் ஹரிணி, அஜய் பரத், ராம், வித்யா ஆகியோர் தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்