துபாய் விமான கண்காட்சியில்இந்திய விமானி உயிரிழப்பு.
தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி!
விமானி நமன்ஷ் ஷ்யால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கிராம மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். மறைந்த விமானி ஷ்யால் ஹிமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த காங்க்ரா மாவட்டத்தை சேர்ந்தவர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் THE DUBAI AIRSHOW என்ற நிகழ்ச்சி கடந்த 17ஆம் தேதி அல் – மக்டோம் சர்வதேச விமான நிலையத்தில் தொடங்கியது. இந்த கண்காட்சியில் ரஷ்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தனியார் விமான நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்திருந்தன. இதில் பல்வேறு நாட்டு விமானப்படை விமானங்களுடன் இந்திய விமானப்படையின் தேஜஸ், ரஃபேல், சூரிய கிரண் உள்ளிட்ட விமானங்கள் இணைந்து வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தின. இந்நிலையில் கண்காட்சியின் கடைசி நாளான நேற்று இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான ’LCA Mk-1’ என்ற தேஜஸ் ரக விமானமும் பங்கேற்றது.
இந்த விமானம் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விமானி நமன்ஷ் ஷ்யால்- ன் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. தேஜஸ் விமான விபத்தில் விமானி நமன்ஷ் ஷ்யால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து இரங்கல் தெரிவித்துள்ள விமானப்படை,இறந்த விமானியின் குடும்பத்துக்கு உறுதுணையாக இருப்போம் என் கூறியுள்ளது. மேலும் தேஜஸ் விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்று விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Comments are closed.