தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்!

இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து போராட்டம்!

தமிழக அரசுக்கு எதிராக, திருநெல்வேலி மாவட்டத்தில் தனியார் சுயநிதி பள்ளிகளில், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள்!

இரண்டு ஆண்டுகளாக, கல்வி உரிமைத்தொகை ( RTE) பணம் வழங்காததை கண்டித்து போராட்டம்!

Bismi

திருநெல்வேலி,நவம்பர் 12:-

நாடு முழுவதும் தனியார் சுயநிதி பள்ளிகளில், “கல்வி உரிமை சட்டம்” எனப்படும் RTE ( RIGHT TO EDUCATION ACT) திட்டத்தின் கீழ், ஏழை- எளிய மணவர்கள் தங்குதடையின்றி, தங்களுடைய கல்விப்பயணத்தை தொடர்வதற்காக, மாணவ, மாணவியரின் எண்ணிக்கையின் அடிப்படையில், ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட தொகையை, அந்தந்த மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது. அதன்படி தனியார் சுயநிதி பள்ளிகள், எவ்வித கல்விக்கட்டணமும் பெறாமல் 25 சதவீத இடங்களில், இத்திட்டத்துக்கான தகுதியுடைய மாணவ, மாணவிகளை ஆண்டு தோறும், சேர்த்து வருகிறது. அவ்வாறு சேர்க்கப் படுபவர்களுக்கு உரிய கல்வி கட்டணத்தை பள்ளிகளுக்கு, ஆண்டு தோறும் மாநில அரசுகள் வழங்கிவிடும். ஆனால், “முதலமைச்சர்” மு.க. ஸ்டாலின் தலைமையிலான, “தமிழ்நாடு அரசு” கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதாவது 2023-’24 மற்றும் 2024-’25 ஆகிய, இரண்டு கல்வி ஆண்டுகளுக்கான RTE பணத்தை, இன்னும் தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு வழங்காமல், இழுத்தடித்து வருகிறது. இதனை கண்டித்தும், இனியும் காலதாமதம் செய்யாமல், உடனடியாக RTE பணத்தை, “தமிழ்நாடு அரசு” விடுவிக்க கோரியும், “பெப்ஸா” ( FEPSA- FEDERATION OF PRIVATE SCHOOLS’ ASSOCIATIONS) அமைப்பு சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் சுயநிதி பள்ளிகளில், நேற்று( நவம்பர்.12) தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பிற பணியாளர்கள் அனைவரும், “கறுப்பு பேட்ஜ்” அணிந்து, பணியாற்றினர். திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில், நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்சி என, மொத்தம் சுமார் 150 பள்ளிகள், இதில் பங்கேற்றிருந்தன. அத்துடன், எல்லா பள்ளிகளிலும், தமிழக அரசை கண்டித்து, “பேனர்கள்” கட்டப்பட்டிருந்தன.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்