திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் 1,00,000 மர விதைகள் தூவ, 27,000 விதை பந்துகள் உருவாக்கி சாதனை படைத்த, தாழையூத்து சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள்!

திருநெல்வேலி,நவ.7:-

Bismi

திருநெல்வேலி மத்திய மாவட்டம், தழையூத்து

சங்கர் நகர், சங்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.ரெங்கநாதன் தலைமையில், உதவி தலைமை ஆசிரியர் சொ. உடையார் முன்னிலையில், தேசிய பசுமை படை மற்றும் குடிமக்கள் நுகர்வோர் மன்ற திட்ட அலுவலர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் செல்வன், குடிமக்கள் நுகர்வோர் மன்ற உதவி திட்ட அலுவலர் லேகா ஆகியோரின் ஒருங்கிணைப்பில், மாணவ மாணவியர் 1,00,000 மர விதைகள் அடங்கிய, 27,000 விதை பந்துகளை வீடுகளில் குடும்ப உறுப்பினர்களின் உதவியினால் உருவாக்கி, பள்ளியில் ஒப்படைத்தனர். மிக அதிக அளவில், 1,150விதை பந்துகள் கொண்டு வந்த, 8-ஆம் வகுப்பு மாணவர் சிவபெருமாள் என்பவருக்கு, பிரபல சமூக ஆர்வலர் “வெங்கடாம் பட்டி” பூ. திருமாறன் பொன்னடை அணிவித்து, “8-வது அதிசயம்” விருதினை வழங்கி, பாராட்டினார்.விதை பந்துகளை உருவாக்கிய, அனைத்து மாணவ- மாணவியருக்கும், தனியார் உணவக உரிமையாளர் சாம்பவர் வடகரை ஹரிஹர செல்வன், பாராடடு சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார். நிகழ்ச்சியில், அம்பை மரகதமணி, ஆசிரியர் ராகுல் ஆகியோர் உட்பட, பலரும் பெருந்திரளாக, கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்