- Advertisement -

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், பங்கேற்பதற்கு அரசு பள்ளி மாணவர் தகுதி! – திருநெல்வேலி

- Advertisement -

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், பங்கேற்பதற்கு அரசு பள்ளி மாணவர் தகுதி! – திருநெல்வேலி

 

 

திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், பங்கேற்பதற்கு தகுதி! பள்ளித் தலைமையாசிரியை, ஆசிரியப்பெருமக்கள், மாணவ- மாணவிகள், உற்சாகத்துடன் வழியனுப்பி வைத்தனர்!

 

Bismi

திருநெல்வேலியை அடுத்துள்ள பேட்டை நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்,8-ஆம் வகுப்பு பயின்று வரும் S. தரணி விஜய் தமிழக அணியில், தேசிய சப்-ஜூனியர் “அட்யா பட்யா சேம்பியன்ஷிப்” போட்டியில் கலந்து கொள்வதற்காக, தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை, பள்ளியின் தலைமையாசிரியை J.ரோகிணி பாராட்டி, வாழ்த்தினார். பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் “முனைவர்”.வெ.பெரியதுரை, மாணவன் தரணி விஜய்யின் பயணத்துக்கான ஏற்பாடுகளை, சிறப்பாக செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, பள்ளித்தலைமையாசிரியை, ஆசிரியப்பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள், தேசியப்போட்டியில் தரணி விஜய் வெற்றி பெற வாழ்த்தி, அன்புடன் வழி அனுப்பி, வைத்தனர்.தேர்வாகி உள்ள மாணவனுக்கு, பயிற்சி முகாம் சென்னையில் நாளை ( செப்டம்பர். 7) முதல் 16.-ஆம் தேதி மொத்தம் 10 நாட்கள் நடைபெறுகிறது. பயிற்சி முடிந்தவுடன், 19.09.25 முதல் 21.09.25 வரை தேசிய சப் ஜீனியர் “அட்யா பட்யா” சேம்பியன்ஷிப் போட்டிகள், மகாராஷ்டிரா மாநிலம் மல்காபூரில், நடைபெறுகிறது.

 

Vagai

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

- Advertisement -

- Advertisement -

Aravanaikkum

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்