திருச்சி தஞ்சை சாலையில் காந்தி மார்க்கெட் பகுதியில் மாரியம்மன் கோவில் அருகில் பிலால் மினி மஹால் திறப்பு விழா நடைபெற்றது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஜோசப் லூயிஸ் ரிப்பன் வெட்டி மினி மஹாலை திறந்து வைத்தார். விழாவில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விசுவநாதன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜவகர், திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளர் மதிவாணன், மதிமுக மாவட்ட செயலாளர் வெள்ளை மண்டி சோமு, கவுன்சிலர்கள் உள்பட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும், பிற அரசியல் பிரமுகர்களும், விழாவில் கலந்து கொண்டு, பிலால் மினி மஹால் உரிமையாளரும், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான பிலால் அவர்களின் விடாமுயற்சியை பற்றியும் தன்னம்பிக்கை பற்றியும் வாழ்த்தி பேசினர்,
பிலால் மற்றும் ராஜ முகம்மது ஆகியோர் விழாவுக்கு வந்த அனைவரையும் வரவேற்றனர்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் உரிமையாளர் பிலால் கூறுகையில் திருமண சுப காரியங்கள் அனைத்து விசேஷங்களும் மற்றும் அனைத்து விதமான கூட்டம் நடத்த ஏற்ற வகையில் குறைந்த வாடகையில் நிறைந்த வசதிகளோடு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மினி மஹால் அமைக்கப்பட்டுள்ளது,
இந்த மினி மஹால் 250 பேர் அமரும் வகையில், 150 பேர் அமர்ந்து சாப்பிடும் வகையிலும், மேலே ரூப் கார்டனில் 75 பேர் அமரும் வகையிலும்,
பார்க்கிங் வசதியுடன் உள்ளது என்று கூறினார்.
விழாவில் அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.