100 நாள் வேலை கேட்டு வந்த மாற்றுத்திறனாளிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திக்காததால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

100 நாள் வேலை கேட்டு வந்த மாற்றுத்திறனாளிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திக்காததால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் மாதம்தோறும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை நூறு நாள் வேலை சம்பந்தமாக திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு கூட்டம் நடைபெறுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கூட்டத்திற்கு வந்த மாற்றுத்திறனாளிகளை திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த மாற்றுத்திறனாளிகள் திருவெறும்பூர் ஒன்றிய மாற்று திறனாளிகள் நலச்சங்க செயலாளர் சித்ரா தலைமையில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Bismi

இதனால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்தது திருவெறும்பூர் போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிட செய்தனர்.

 

பின்னர் மாற்றுத்திறனாளிகள் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சிஅலுவலகத்தைமுற்றுகையிட்டு அமர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டனர் அவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தகுமார், அண்ணாதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

 

இந்த பேச்சு வார்த்தையில் தினமும் மாற்றுத்திறனாளிகள் ஐந்து பேருக்கு 100 நாள் வேலை பணி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை ஏற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

இதனால் திருவெறும்பூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

- Advertisement -

Comments are closed.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்