நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டின் 79வது சுதந்திர தினம் நாடு முழுவதும் வரும் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் முக்கிய இடங்களில் தீவிரவாதிகளின் சதி திட்டங்களை தடுப்பதற்காகவும் பாதுகாப்பு கருதி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே சந்திப்பில் திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சார்பாக ராக்கி என்ற மோப்ப நாய் உதவியுடன் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜய் குமார் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு கருப்பு பிரிவினர் திருச்சி ரயில் நிலையத்தில் வரும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ரயில்வே ஜங்ஷன்லில் ஹௌரா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனை செய்வது மட்டுமல்லாமல் ரயில் முழுவதும் மோப்பநாய் ராக்கி உதவியுடன் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக திருச்சி ரயில்வே வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான சாப்பிட்ட கூடிய வெடிக்கும் பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் திடீரென ரயில் நிலையத்தில் சோதனை செய்து வருவதால் ரயில் நிலையத்தில் தீவிரவாதிகள் யாரேனும் வந்துவிட்டனரா என ரயில் நிலையத்தில் வரும் பயணிகளிடம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜய் குமார் பேசியது :
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறோம். சந்தேகப்படும்படி நபர்களோ அல்லது உடைமைகளோ இருந்தால் உடனடியாக அது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சுதந்திர தினம் விழாவை ஒட்டி எந்தவிதமான அசம்பாவித சம்பவம் ஏற்படாமல் இருப்பதற்காக காலை முதல் இரவு வரை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேலும் பொதுமக்கள் ரயில்வே துறை விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.


Comments are closed.