திருமயத்தை அடுத்த மேலூரில் 71 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்
திருமயத்தை அடுத்த மேலூரில் 71 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை அடுத்த மேலூரில் 71 ஆம் ஆண்டு தைப்பொங்கல் விழா முதல் நாளாக மேலூர் பள்ளியின் தலைமை ஆசிரியை v. மாலா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது



நிகழ்ச்சியில் ஜி ஆர் பி பில்டர்ஸ் புகழேந்தி அனைவரையும் வரவேற்று பேசினார் மாணவ மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி விளையாட்டுப்போட்டி நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து நகைச்சுவை பேரரசு நடுவர் தேவகோட்டை
எஸ் இராமநாதன் தலைமையில் குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு பெரிதும் துணை நிற்பவர்கள் ஆண்களா பெண்களா என்ற நகைச்சுவை பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற்றது, இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஊர் தலைவர் அ.வெள்ளையன் தலைமையில் அதனைத் தொடர்ந்து முதல் நாளும் இரண்டாம் நாளும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் ஆச்சிமசாலா டீலர் விஷ்ணு ஏஜென்சி உரிமையாளர் v.சண்முகம் முதல் நாள் முதல் இரண்டாம் நாள் நிகழ்ச்சி முடியும் வரை ஒவ்வொரு நபரையும் சிறப்பு அழைப்பாளர்களாக வரவேற்று பேசினார் மற்றும் முன்னிலை யாளர்கள் ஊர் செயலாளர் குமர. சுப்பையா ஊர் பொருளாளர் வெ. அழகிரிசாமி ஊர் துணைத் தலைவர் க. சண்முகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெ வடிவேலு
வரலாறு பத்திரிக்கை நிருபர் எம் சிங்காரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது ஓய்வு பெற்ற பணியாளர்களை பாராட்டி என் பழனியப்பன் பேசினார் அதனைத் தொடர்ந்து இரவு 10 மணி அளவில் சென்னை கலைமாமணி திரை இசை பின்னனி பாடகர் வேல்முருகன் இன்னிசை திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது மேலும் விழா கமிட்டி நிர்வாகிகள் தலைவர் வெ. சண்முகம், துணைத் தலைவர் எம் ஆனந்தன், துணைச் செயலாளர் எம் ரவி எஸ், பொருளாளர் அசோக் குமார்
மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் விழா குழு பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் வெளிநாடு வாழ் இளைஞர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அனைவருக்கும் ஏ ஆனந்தராஜ் நன்றி தெரிவித்தார்.






Comments are closed.