மதுரையில் மருத்துவ சமுதாயத்தினருக்கு 5%சதவீத இட உள் ஒதுக்கீடு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மதுரையில் மருத்துவ சமுதாயத்தினருக்கு 5%சதவீத இட உள் ஒதுக்கீடு பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

மதுரையில் தமிழ்நாடு மருத்துவர் சமுதாய பேரவை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல சங்கம் மதுரை மாநகர மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாநகர தலைவர் ஏ.முருகன் தலைமையில் நடைபெற்றது,
மாநகர செயலாளர் ப.அண்ணாதுரை, மாநகர பொருளாளர் vm நாகராஜன், முன்னிலையில் கூட்டம் சிகப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் மாநில இளைஞரணி செயலாளர் ஆர்.தங்கமலை அனைவரையும் வரவேற்றுப் பேசினார், சிறப்பு அழைப்பாளர்கள் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர் மேலும் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 116 ஜாதிகளில் மருத்துவர் சமுதாயத்தினருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை இதனால் கல்வி வேலை வாய்ப்பு களில் மருத்துவ சமுதாயத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர் எனவே மிகவும் பிற்படுத்தப்பட்டியலில் 5% சதவிகித இட உள் ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும்,


அதேபோல திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸ் இல்லம் பராமரிப்பு இன்றி வேதனையாக இருக்கிறது அவருடைய இல்லத்தை தமிழக அரசு சீரமைத்து ஏழை எளியோர் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு சீரமைத்து தர வேண்டும் எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலத் தலைவர் வெங்கட் பழனி, மாநில பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் மாநில பொருளாளர் அழகர்சாமி மற்றும் மாநில மாவட்ட துணை நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்த ஜெயா மஹால் உரிமையாளர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது,
மேலும் மதுரை மாநகர கிளை நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக கலந்து கொண்டு அவரவர் கருத்துக்களை எடுத்து கூறினர் மேலும் இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் மாநில நிர்வாக குழு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


Comments are closed.